திருச்செங்கோடு V.V.C.R. வையாபுரி முதலியார்

0

 


திருச்செங்கோடு பெரும் செல்வந்தர்  செங்குந்த கைக்கோளர் மரபு புள்ளிக்காரர் கோத்திரம், வி.வி.சி. ராமலிங்க முதலியார் - கணபதி அம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார்.

புள்ளிக்கார் மில்ஸ் என்கிற புகழ்பெற்ற நூல்  மில்லை நிறுவியவர். அந்த மில்லில் நூல் (contract ) ஒப்பந்தம் செய்து விற்று மிகப்பெரிய லாபம் அடைந்தவர்கள் ஆயிரக்கணக்கனோர். வையாபுரி முதலியார் காலம்தவறாமையில் ஆங்கிலேயருக்கு இணையானவர் மில்லின் சுற்றுச்சுவரே மிகப் பிரம்மாண்டமாக இருக்கும். நூலின் தரம் மிகச் சிறப்பானதாக இருக்கும். தமிழ்நாட்டின் சிறந்த நூல்மில்களில் புள்ளிக்கார் மில்லும் ஒன்று. செங்குந்தர் புள்ளிக்காரர் கூட்டத்துக்கு பெருமை சேர்க்கவே மில்லுக்கு பெயர் வைத்தார். அவர்காலத்தில் புள்ளிக்கார்  மில் பணம் காய்க்கும் தோப்பு. இவர் குலதெய்வ சிறப்பு வழிபாட்டு விழாவுக்கு  மில்லில் சமையல் செய்ய பெரிய பாத்திரங்களில் இரட்டை மாட்டு வண்டிகளில் வரும். இதையெல்லாம் பார்த்து மற்ற உறவினர்கள் பிரமிப்பார்கள். மற்ற சொந்தங்கள் மரியாதை காரணமாக முன்னால் நின்று VVCR குடும்பத்தினருடன்  பேசவே தயங்குவார்கள். இன்றும் திரு வையாபுரி முதலியார் மார்பளவு பளிங்குக் சிலை அவர் பெருமையைச் சொல்லிக் கண்டிருக்கிறது. 

திருச்செங்கோடு அர்த்தநாரேஸ்வரர் கோவில் செங்குந்தர் மண்டகப்படிக்கு தங்க சப்பரம் செய்து கொடுத்தது இவரே 

திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நிலம் தனமாக கொடுத்து பல கட்டிடங்கள் கட்டி கொடுத்தது இவரே 

திருச்செங்கோடு மலை பாதை படிகெட்டுகள் இவரால் சீர்செய்ய பட்டது, வேறு சமூக அறங்காவலர்கள் இவர் கல்வெட்டை தற்போது தகர்த்து விட்டனர்.

திருச்செங்கோடு போர்ட் ஐஸ்கூல் அட்வைசரி கமிட்டி தலைவராக சேவை செய்தவர் 


பஞ்சாயத்து கோர்ட் உறுப்பினராக சேவை செய்தவர் 

சேலம் ஜில்லா முனிசிபல் கவுன்சிலராக சேவை செய்தவர்.



புள்ளிகார் மில்ஸ்


இவரின் மூத்த அண்ணன் கந்தப்ப முதலியார் திருச்செங்கோடு நகரின் முதல்  நகர்மன்றத் தலைவர். இவரின் தம்பி முருகேச முதலியார் ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகத்தின் நிறுவனர். இவரின் மற்றொரு தம்பி டி.ஆர். சுந்தரம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனர்.


11ஆவது செங்குந்தர் மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக பணியாற்றியவர் வையாபுரி முதலியார்














Post a Comment

0Comments
Post a Comment (0)